இலங்கையின் வலையில் சிக்கும் தமிழக மீனவர்கள்
1971ஆம் ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவியது. சுமார் 13 நாட்கள் நடைபெற்ற போரில் இந்தியா இமாலய வெற்றியை ரூசித்து வங்கதேசம் உருவாக காரணமாயிருந்தது. இதனால் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்தியா மீது கடும் கோபத்தில் இருந்த போது இந்தியாவிற்க்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலங்கையை நட்பு நாடாக மாற்ற திட்டம் தீட்டினர். இதனை அறிந்த இந்திரா காந்தி இலங்கை தம் வசம் இருக்க வேண்டும் என எண்ணினார். அந்த சமயங்களில் இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாகோ பண்டார நாயகாவிற்கு உள் நாட்டில் பல அரசியல் காரணங்களுக்காக செல்வாக்கு குறைந்து கொண்டே வந்தது, இலங்கையை நட்பு நாடாக மாற்ற வேண்டும் என்ற இந்திராவின் எண்ணமும் இலங்கையில் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் ஒத்து போனதால் இலங்கைக்கு இறையானது கச்சத்தீவு.
1973ஆம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு முறை பயணமாக இலங்கை சென்றார் அந்த சந்திப்பின் போது பாக் நீர் சந்திப்பின் கடல் எல்லைகள் வகுப்பது, கச்சதீவு ஆகிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கே தாரைவார்க்கும் முடிவை எடுத்ததால் தான் இன்று ஒவ்வொரு மீனவ குடும்பங்களில் விதவைகள் உருவெடுக்க காரணமாய் அமைகிறது. 28.06.1974
அன்று இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்த விவகாரம் குறித்து மக்களவையிலும், மாநிலங்கவையிலும் எந்த ஒரு தீர்மானமும் இயற்றப் படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இருநாட்டு மக்களுக்குள் எந்த வித பிரச்சனையும் ஏற்படுத்தாமல் இருந்த கச்சதீவு விவகாரம் ”நிறு பூத்த நெருப்பாக” உருவெடுக்க காரணம் இரு நாட்டு பிரதமர்களே.
கச்சதீவு கைமாற போகிறது என்பதை கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் கருணாநிதி இலங்கைக்கு தாரைவார்க்க வேண்டாம் என கடிதம் ஒன்றை எழுதினார். அவர் எழுதிய கடிதத்திலிருந்து…
”கச்சத்தீவு இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்களை கிடைத்துள்ளன. நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்துக் குளித்தல், சங்கு எடுப்பு அகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட பல தென்இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. கச்சதீவு செல்லும் பாதையிலும், கச்சதீவு மேற்பகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. அங்கு சங்கு எடுத்தற்கான எந்த காலத்திலும் இலங்கை அரசிற்கு கப்பம் கட்டியதில்லை. இப்போது கிடைத்திற்கும் அந்த ஆதாரங்களை வைத்து கொண்டு கச்சதீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை அகில உலக நீதிமன்றங்களிலும் எடுத்து சொல்லை நீருபிக்க முடியும் என்று சென்னை சட்ட கல்லூரியின் ஆராய்ச்சிப் பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது. எனவே இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும் போழுது இந்த ஆதாரங்களை எடுத்துக் காட்டி கச்சதீவு இலங்கைக்கு சொந்தமல்ல என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகின்றேன். என அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். அதோடு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை திரும்ப பெற அழுத்தம் கொடுத்த தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இந்திரா காந்தி செவிமடுக்காதது காங்கிரஸ் கட்சியின் மீது பெரும் கோபத்தை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்பதை நம்ப எந்த அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்
28.06.1974 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களில் 5வது ஷரத்தில் இதுவரை இரு நாட்டு மக்களும் எப்படி கச்சதீவு ஓட்டி உள்ள பகுதிகளை பயன்படுத்தினார்களோ அதே போல் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இலங்கை அரசிடம் எந்த முன் அனுமதியும் பெற வேண்டாம் என்றும் அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது நடைமுறையில் இருக்குமா என்ற கேள்வி அன்றே எழுந்தது.
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகனடப்படுத்தப் பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்திலும் இந்தியா-இலங்களையிடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 1976 ஆம் ஆண்டு மார்ச் 22இல் வங்கால வரிகுடா. மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய-இலங்கை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற முக்கிய கருத்தும் இடபெற்றது. இப்போது நெருக்கடி நிலை அமலில் இருந்ததால் போராட்டம் நடத்த கூட நடத்த முடியாத துர்தஷ்ட நிலையில் தமிழக மக்கள் இருந்தனர். அந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னும் கூட எந்த பிரச்சனையும் அல்ல. ஆனால் என்று விடுதலை புலிகள் சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதமேந்தினார்களோ அப்போதிலிருந்தே இந்திய எல்லை தாண்டி அதாவது கச்சதீவில் மீன்பிடித்த மீனவர்கள் பலரை சூட்டு கொல்வதும் கைது செய்து சித்தரிவதை செய்வதும் வழக்கமாயிற்று. அன்று ஆரம்பித்த அழுகுரல் இன்று வரை தொடர்கதையாகிறது. உயிருக்கே உத்திரவாதம் இல்லாவிடிலும் இன்றும் தமிழக மீனவர்கள் பிழைப்பு தேடி ஆழ்கடல் நோக்கி அணிவகுக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் பத்திரமாக வீடு திரும்புவார்களா? கடல் அன்னைக்கு தான் வெளிச்சம்.
Comments
Post a Comment