Posts

Showing posts from May, 2020

இலங்கையின் வலையில் சிக்கும் தமிழக மீனவர்கள்

1971 ஆம் ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவியது . சுமார் 13 நாட்கள் நடைபெற்ற போரில் இந்தியா இமாலய வெற்றியை ரூசித்து வங்கதேசம் உருவாக காரணமாயிருந்தது . இதனால் பாகிஸ்தான் , சீனா ஆகிய நாடுகள் இந்தியா மீது கடும் கோபத்தில் இருந்த போது இந்தியாவிற்க்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலங்கையை நட்பு நாடாக மாற்ற திட்டம் தீட்டினர் . இதனை அறிந்த இந்திரா காந்தி இலங்கை தம் வசம் இருக்க வேண்டும் என எண்ணினார் . அந்த சமயங்களில் இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாகோ பண்டார நாயகாவிற்கு உள் நாட்டில் பல அரசியல் காரணங்களுக்காக செல்வாக்கு குறைந்து கொண்டே வந்தது , இலங்கையை நட்பு நாடாக மாற்ற வேண்டும் என்ற இந்திராவின் எண்ணமும் இலங்கையில் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் ஒத்து போனதால் இலங்கைக்கு இறையானது கச்சத்தீவு .       1973 ஆம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு முறை பயணமாக இலங்கை சென்றார் அந்த சந்திப்பின் போது பாக் நீர் சந்திப...